வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் இருந்த குறைந்த தாழமுக்கம் இலங்கையை விட்டு விலகிச் செல்ல ஆரம்பித்திருப்பதாக வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
இதனால், இலங்கையில் அந்தக் குறை தாழமுக்கம் ஏற்படுத்திய தாக்கங்கள் குறைய வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, திருகோணமலைக்கு வட கிழக்குத் திசையில் சுமார் 850 கிலோ மீற்றர் தூரம் அளவுக்கு இத்தாழமுக்கம் விலகிச் சென்றுள்ளது.
இருந்தபோதிலும் அடுத்த ஆறு முதல் பன்னிரண்டு மணித்தியாலத்தினுள் அது தாழமுக்கமாக மாறலாம் என்றும் இதனால் வங்காள விரிகுடாவின் வடக்கு மற்றும் வடமேல் கடற்பகுதியில் கடும் மழை பெய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment