முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளரும், ஸ்ரீ லங்கா ஷிபா பவுண்டேசனின் தலைவருமான பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களினால் வறிய நிலையில் வாழும் கூலித் தொழிலாளி ஒருவருக்கான துவிச்சக்கர வண்டியொன்று நேற்று (05.12.2017) வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நபர் கடந்த 45 வருடங்களுக்கு மேலாக ஜனாஸாக்களுக்கான கப்ருகளை வெட்டும் தொழிலினை மிகவும் உயரிய சேவை நோக்கத்தோடு முன்னெடுத்துவருகின்ற நிலையில் தொடர்ந்தும் மிகவும் வறுமைக்கு மத்தியிலேயே வாழ்க்கை நடாத்தி வருகின்றார்.
இவர் பயன்படுத்தி வந்த துவிச்சக்கர வண்டி மிகவும் சேதமடைந்து பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டிருந்த நிலையில் ஊடகவியலாளர் ஒருவர் தனது முகநூல் பதிவின் மூலம் குறித்த நபருக்கான துவிச்சக்கர வண்டி ஒன்றினை பெற்றுக்கொடுக்க எவரேனும் முன்வருமாறு வேண்டுள் ஒன்றினை விடுத்திருந்தார்.
இவ்வேண்டுகோள் விடுக்கப்பட்டு ஒரு சில நிமிடங்களுக்குள் குறித்த ஊடகவியலாளரை தொடர்புகொண்ட முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அக்கூலித் தொழிலாளிக்கான துவிச்சக்கர வண்டியினை பெற்றுக்கொடுப்பதாக அளித்த வாக்குறுதிக்கமைவாக நேற்று இரவு அவருக்கான துவிச்சக்கர வண்டியினை தனது காரியாலயத்தில் வைத்து கையளித்திருந்தார்.
No comments:
Post a Comment