இலங்கை மற்றும் சீனாவுக்கிடையிலான இராஜதந்திர நட்புறவின் அறுபதாவது ஆண்டு நிறைவையொட்டி இன்று (06) புதன்கிழமை நட்புறவு புகைப்படக்கண்காட்சி கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகமவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
திருகோணமலை மாவட்ட செயலகமும் சிறிலங்கா சீனா நட்புறவு சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இப்புகைப்படக்கண்காட்சி இன்று 6ஆம் திகதி புதன்கிழமையும் நாளை வியாழக்கிழமையும் காலை 10.00 மணியிலிருந்து பிற்பகல் 4.00 மணிவரை திருகோணமலை நகர சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளதாகவும் மாவட்ட செயலகத்தின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சிறி லங்கா சீனா நட்புறவு சங்கத்தின் அதிகாரிகள், திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ. புஸ்பகுமார மற்றும் அரச அதிகாரிகள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் சிறி லங்கா சீனா நட்புறவு சங்கத்தின் அதிகாரிகள், திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ. புஸ்பகுமார மற்றும் அரச அதிகாரிகள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment