தீப்பிடித்த X-Press Pearl கப்பல் தொடர்பான வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது - News View

Breaking

Post Top Ad

Thursday, July 15, 2021

தீப்பிடித்த X-Press Pearl கப்பல் தொடர்பான வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தீப்பிடித்த X-Press Pearl கப்பல் தொடர்பான வழக்கு எதிர்வரும் ஓகஸ்ட் 06ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று (15) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டாவத்தே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது சட்டமா அதிபர் நாயம் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் நாயகம் மாதவ தென்னகோன், குறித்த கப்பல் தீ விபத்து தொடர்பான விசாரணை விரைவில் முடிக்கப்பட வேண்டும் என்றும், அதன் முன்னேற்றம் குறித்து அறிக்கை அளிக்க நீதிமன்றத்திற்கு அதிக நேரம் ஒதுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

அதன்படி, குறித்த வழக்கை ஓகஸ்ட் 06 ஆம் திகதிதிக்கு ஒத்தி வைப்பதாக, மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டதோடு, விசாரணையின் முன்னேற்றம் தொடர்பில் அறிவிக்குமாறும் உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad