சீனா மேலும் 1.6 மில்லியன் டோஸ் தடுப்பூசிகளை இலங்கைக்கு அன்பளிப்பு செய்ய தீர்மானம் - News View

About Us

About Us

Breaking

Thursday, July 15, 2021

சீனா மேலும் 1.6 மில்லியன் டோஸ் தடுப்பூசிகளை இலங்கைக்கு அன்பளிப்பு செய்ய தீர்மானம்

மேலும் 1.6 மில்லியன் டோஸ் Sinopharm தடுப்பூசிகளை இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்க சீன அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, இலங்கையிலுள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

அதன் உத்தியோகபூர்வ ட்விற்றர் பக்கத்தில் இடுகையொன்றை இட்டுள்ள தூதரகம் இதனைத் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் வாரங்களில் இலங்கையை வந்தடையவுள்ள இத்தடுப்பூசிகள், நாட்டின் தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்துவதற்கு உதவியாக அமையுமென சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

சீனா சிக்கலிலிருந்த சமயத்தில் இலங்கை அரசாங்கம் செய்த உதவிகளை ஒருபோதும் மறக்கமாட்டோம் என, குறித்த ட்விற்றர் இடுகையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய, Sinopharm கொவிட்-19 தடுப்பூசி டோஸ்கள் இலவசமாக கிடைத்தவை
மார்ச் 31 - 600,000
மே 25 - 500,000
(மேலும் 1.6 மில்லியன் கிடைக்கவுள்ளன)

கொள்வனவு செய்யப்பட்டவை
ஜூன் 06 - ஒரு மில்லியன்
ஜூன் 09 - ஒரு மில்லியன்
ஜூலை 02 - ஒரு மில்லியன்
ஜூலை 04 - ஒரு மில்லியன்
ஜூலை 11 - 2 மில்லியன்

No comments:

Post a Comment