மனிதர்களிடத்தில் பறவைக் காய்ச்சல் : உறுதி செய்தது சீனா - News View

Breaking

Post Top Ad

Thursday, July 15, 2021

மனிதர்களிடத்தில் பறவைக் காய்ச்சல் : உறுதி செய்தது சீனா

சிச்சுவான் மாகாணத்தில் எச் 5 என் 6 பறவைக் காய்ச்சலால் மனித நோய்த் தொற்று ஏற்பட்டதை சீனா உறுதிப்படுத்தியுள்ளது என்று அந்நாட்டு அரச ஊடகங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன.

அதன்படி பஜோங் நகரில் பறவைக் காய்ச்சலாலால் பாதிக்கப்பட்ட 55 வயது ஆணொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஜனவரி மாதம்,பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி 660,000 க்கும் மேற்பட்ட பறவைகளிடம் பறவைக் காய்ச்சல் பரவுவதைக் கட்டுப்படுத்தின.

பெப்ரவரியில் ரஷ்ய அதிகாரிகள் எச் 5 என் 8 பறவைக் காய்ச்சல் பறவைகளிலிருந்து மனிதர்களுக்கு முதன்முறையாக பரவியதாக கூறினார்.

இதன்போது ரஷ்ய கோழி ஆலையில் ஏழு பேர் நோய்வாய்ப்பட்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad