சுகாதார வழிகாட்டல்களில் மேலும் தளர்வு : ஹோட்டல்கள், தங்குமிட விடுதிகள், மிருகக்காட்சிசாலைகள், சரணாலயங்களை திறக்க அனுமதி - News View

Breaking

Post Top Ad

Friday, July 16, 2021

சுகாதார வழிகாட்டல்களில் மேலும் தளர்வு : ஹோட்டல்கள், தங்குமிட விடுதிகள், மிருகக்காட்சிசாலைகள், சரணாலயங்களை திறக்க அனுமதி

தற்போது நடைமுறையிலுள்ள கொவிட்-19 தொடர்பான சுகாதார வழிகாட்டல்கள் மேலும் தளர்த்தப்பட்டுள்ளன.

இன்று (16) முதல் அமுலாகும் வகையில் குறித்த நடமுறைகள் அமுலுக்கு வருவதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன விடுத்துள்ள வழிகாட்டல் கோவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய
உள்ளக இசை நிகழ்ச்சிகளுக்கு மாத்திரம் அனுமதி (மண்டப ஆசன எண்ணிக்கையில் 50%; திறந்தவௌியில் அனுமதி இல்லை)

ஹோட்டல்கள், தங்குமிட விடுதிகளுக்கு அனுமதி

சூதாட்ட விடுதிகளை திறக்க அனுமதி

மிருகக்காட்சிசாலைகள் (25% கொள்ளளவு), சரணாலயங்கள், சிறுவர் பூங்காக்களை திறக்க அனுமதி

விளையாட்டுகள் : பௌதீக ரீதியிலான தொடுகையுடன் சம்பந்தப்பட்ட விளையாட்டுகள் தவிர்ந்த ஏனைய விளையாட்டுகளுக்கு அனுமதி

No comments:

Post a Comment

Post Bottom Ad