130 மில்லியனுக்கும் அதிகமான ஹெரோயினுடன் 'கிம்புலா எலே குணா' வின் சகோதரர் மற்றும் மனைவி கைது - News View

Breaking

Post Top Ad

Saturday, July 17, 2021

130 மில்லியனுக்கும் அதிகமான ஹெரோயினுடன் 'கிம்புலா எலே குணா' வின் சகோதரர் மற்றும் மனைவி கைது

திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் 'கிம்புலா எலே குணா' எனும் சந்தேகநபரின் சகோதரர் சுரேஷ் எனும் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் சந்தேகநபர் ரூபா. 130 மில்லியனுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப் பொருளுடன் விசேட அதிரடிப்படையினரால் (STF) கைது செய்யப்பட்டுள்ளார்.

கிம்புலா எலே குணா தற்போது இந்தியாவில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள, திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுவின் உறுப்பினராவார்.

நேற்றிரவு (17) ஆட்டுப்பட்டித்தெரு பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில்,வீடொன்றின் சமையலறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 13 கிலோ கிராம்  ஹெரோயினை போதைப் பொருளை மீட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து குறித்த வீட்டிலிருந்த சந்தேகநபர்களான சுரேஷ் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு, பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad