இலங்கை வவுனியா பல்கலைக்கழகம்' உதயம் - ஓகஸ்ட் 01 முதல் பிரகடனம்; வர்த்தமானி வெளியீடு - News View

Breaking

Post Top Ad

Tuesday, June 8, 2021

இலங்கை வவுனியா பல்கலைக்கழகம்' உதயம் - ஓகஸ்ட் 01 முதல் பிரகடனம்; வர்த்தமானி வெளியீடு

ஒகஸ்ட் 01ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கையில் மற்றுமொரு பல்கலைக்கழகமாக, 'இலங்கை வவுனியா பல்கலைக்கழகம்' தாபிக்கப்படுவதாக, கல்வியமைச்சர் ஜீ.எல். பீரிஸினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அதி விசேட வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளதன் மூலம் இது தொடர்பான அறிவிப்பு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகமே இன்னும் இரு மாதங்களில் இவ்வாறு தனியான தேசிய பல்கலைக்கழகமாக மாற்றமடையவுள்ளது.

வியாபார கற்கைகள் பீடம், பிரயோக விஞ்ஞானம் பீடம், தொழில்நுட்ப கற்கைகள் பீடம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக, குறித்த கற்கைகளின் உயர் கற்கைகளை வழங்கும் பொருட்டு, வவுனியா பல்கலைக்கழகம் தாபிக்கப்படுகின்றது.

வியாபரம் கற்கைகள் பீடம்
நிதி மற்றும்‌ கணக்கியல்‌ துறை
ஆங்கில மொழி கற்பித்தல்‌ துறை
கருத்திட்ட முகாமைத்துவத்‌ துறை
மனிதவள முகாமைத்துவத்‌ துறை
சந்தைப்படுத்தல்‌ முகாமைத்துவத்‌ துறை
வியாபாரப்‌ பொருளியல்‌ துறை
முகாமைத்துவ மற்றும்‌ தொழில்‌ உரிமையாண்மைத்‌ துறை

பிரயோக விஞ்ஞானம் பீடம்
பெளதிக விஞ்ஞானத்‌ துறை
உயிரியல்‌ விஞ்ஞானத்‌ துறை

தொழில்நுட்ப கற்கைகள் பீடம்
தகவல்‌ மற்றும்‌ தொடர்பாடல்‌ தொழில்நுட்பவியல்‌ துறை

வவுனியா வளாகம் 1997ஆம் ஆண்டு (மார்ச் 26: 968/6 வர்த்தமானி அறிவிப்பின் மூலம்) உருவாக்கப்பட்டதோடு, அதற்கமைய ஜூலை 31ஆம் திகதி முதல் அவ்வர்த்தமானி அறிவிப்பு இரத்துச் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad