உத்தரப் பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 16 பேர் பலி, 6 பேர் காயம் - News View

Breaking

Post Top Ad

Tuesday, June 8, 2021

உத்தரப் பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 16 பேர் பலி, 6 பேர் காயம்

உத்தரப் பிரதேச மாநிலம் சச்செண்டி பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 16 பேர் உயரிழந்துள்ளதுடன், 6 பேர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சச்செண்டி, கான்பூர்-அலகாபாத் நெடுஞ்சாலையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்களில் இருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

பயணிகள் பஸ்ஸொன்று டெம்போ லொறியொன்றின் மீது மோதி கவிழ்ந்து வீழ்ந்து விபத்துக்குள்ளானதாக குறித்த பகுதிக்கான பொலிஸ் அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர்.

முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்ததுடன், இறந்தவரின் உறவினர்களுக்கு தலா 2 இலட்சம் இந்திய ரூபாவை நஷ்ட ஈடாக வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் விபத்துக்கு பின்னால் உள்ள காரணங்கள் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதேநேரம் உடனடி உதவிகளை வழங்கவும், காயமடைந்தவர்களுக்கு முறையான சிகிச்சையை உறுதி செய்யவும் முதல்வர் உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad