பாரத் பயோடெக்கின் கோவேக்சின் தடுப்பூசிக்கு அனுமதியளிக்க மறுத்தது அமெரிக்கா - News View

Breaking

Post Top Ad

Friday, June 11, 2021

பாரத் பயோடெக்கின் கோவேக்சின் தடுப்பூசிக்கு அனுமதியளிக்க மறுத்தது அமெரிக்கா

பாரத் பயோடெக்கின் கோவேக்சின் தடுப்பூசியை அவசர தேவைக்காக பயன்படுத்த அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி மறுத்துள்ளது.

இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்சின் தடுப்பூசி இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளின் அவசரகால தேவைக்கு அனுமதிக்கப்பட்டு பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசியை அமெரிக்கவில் தயாரித்து வினியோகம் செய்ய ஒகுஜென் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. 

அந்த நிறுவனம் சார்பில் கோவேக்சின் தடுப்பூசியை அமெரிக்காவில் அவசரகால தேவைக்கு பயன்படுத்திக் கொள்ள அனுமதி கோரியிருந்தது.

இந்நிலையில், கோவேக்சின் தடுப்பூசியை பயன்படுத்த ஒகுஜென் நிறுவனம் அளித்த கோரிக்கையை அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு நிராகரித்துள்ளது.

மேலும், கோவேக்சின் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு விண்ணப்பிக்க கூடுதல் பரிசோதனை முடிவுகளை சமர்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad