போதைப் பொருள் மற்றும் பணத்துடன் 'குடு மங்கலிகா' கைது - News View

Breaking

Post Top Ad

Wednesday, June 23, 2021

போதைப் பொருள் மற்றும் பணத்துடன் 'குடு மங்கலிகா' கைது

(செ.தேன்மொழி)

பேலியகொட பகுதியில் ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் 50 ஆயிரம் ரூபாவுக்கும் அதிகமான பணத்துடன் 'குடு மங்கலிகா' என்றழைக்கப்படும் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பேலியாகொட பகுதியில் செவ்வாய்கிழமை கொழும்பு குற்ற பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபரான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

களனி பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய 'குடு மங்கலிகா' என்றழைக்கப்படும், கலுபானகே மங்களிக்கா எனப்படும் பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருபவர் என்றும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

சந்தேக நபரான பெண்ணிடமிருந்து 102 கிராம் ஹெரோயின் போதைப் பொருளும், 50 ஆயிரத்து 800 ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்நிலையில் இவர் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad