எம்.வி. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதா? : பரபரப்பை ஏற்படுத்தும் செயற்கைக்கோள் படம் வெளியானது...! - News View

Breaking

Post Top Ad

Thursday, June 10, 2021

எம்.வி. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதா? : பரபரப்பை ஏற்படுத்தும் செயற்கைக்கோள் படம் வெளியானது...!

இலங்கையின் வடமேற்கு கடற்பகுதியில் சேதமடைந்த கொள்கலன் கப்பலை சுற்றியுள்ள பகுதியில் எண்ணெய் படிமங்களை வெளிப்படுத்தும் செயற்கைகோள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

கப்பலில் எண்ணெய்க் கசிவு ஏற்படுவதாக Sky இணையத்தளம் செய்தி வௌியிட்டுள்ளது.

கப்பல் மூழ்கியுள்ள பகுதியில் செய்மதி தொழில்நுட்பத்தினூடாக பெறப்பட்ட நிழற்படங்களை மேற்கோள் காட்டி இந்த செய்தி வௌியிடப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்திற்குள் நுழைவதற்கு முன்னர் வடமேற்கு கடற்பபகுதியில் 9.5 கடல் மைல் தொலைவில் நங்கூரமிடப்பட்டிருந்த , எம்.வி. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் மே 20 அன்று தீ விபத்து ஏற்பட்டது.

அதன் பின்னர் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக குறித்த கப்பலானது ஜூன் 02 ஆம் திகதி முதல் கடலுக்குள் மூழ்கத் தொடங்கியது.

இந்த சம்பவம் இலங்கையில் பதிவான மிக மோசமான கடல் சுற்றுச் சூழல் பேரழிவு என்று ஆய்வாளர்களால் விவரிக்கப்பட்டுள்ளது.
இந்த பேரழிவினால் ஆமைகள் உட்பட கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கும் அதேவேளையில் தொன் கணக்கான பிளாஸ்டிக் துகள்களும், குப்பைகளும் கரையொதுங்கியுள்ளன.

இந்நிலையில் தற்சமயம் வெளியாகியுள்ள செயற்கைக்கோள் புகைப்படங்கள் கப்பலைச் சுற்றியுள்ள நீர்ப்பரப்பில் ஒரு பெரிய எண்ணெய் மென்மையான படிமம் படந்திருப்பதை வெளிப்படுத்துகின்றன.

திங்களன்று எடுக்கப்பட்ட புகைப்படங்கள், எண்ணெய் படிமம் பல நூறு மீட்டர் நீளத்தில் படர்ந்திருப்பதை காட்டுகின்றது.

கப்பலின் ஒரு பகுதி கடற்பரப்பில் மூழ்கியிருந்தாலும், சிதைந்த கப்பலின் பெரிய பகுதிகளையும் படங்களில் தெளிவாகக் காணலாம்.

பேரழிவின் சுற்றுச்சூழல் பாதிப்பை சர்வதேச கடல்சார் அமைப்பு உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.
23 தொன் நைட்ரிக் அமிலம் மற்றும் பிற இரசாயனங்கள் அடங்கிய கப்பலின் பெரும்பாலான சரக்குகள் தீயில் அழிந்தன. மீதமுள்ள பொருட்கள் சுற்றியுள்ள கடற்கரைகள் மற்றும் வனவிலங்குகளை அடைவதைத் தடுக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. இது தொடர்பான விசாரணை தற்சமயம் நடந்து வருகிறது.

பொதுவாக "கப்பலின் கறுப்பு பெட்டி" என்று அழைக்கப்படும் கப்பலின் oyage Data Recorder மீட்கப்பட்டது. இது கப்பலின் செயல்பாடு குறித்த தரவைப் பதிவு செய்கிறது.

இழப்பீடு பெற கப்பல் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கப்பல் இக்குநரகத்தின் தலைமை நிர்வாகி ஷுமல் யோஸ்கோவிட்ஸ் கடந்த வாரம் நியூஸ் ஆசியாவுக்கு அளித்த செவ்வியில், பாதிப்பினை ஏற்படுத்தியமைக்காக இலங்கை மக்களுக்கு தனது அழ்ந்த வருத்தத்தை தெரிவித்ததுடன், மன்னிப்பும் கோரினார்.

இந்த சம்பவம் இலங்கை சுற்றுச் சூழலுக்கு மாத்திரம் பேரழிவினை தந்தது மாத்திரம் அல்லாது மீன சமூகத்தினரது வாழ்வாதாரத்தையும் கேள்விக் குறியாக்கியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad