மன்னாரில் நிர்மாணிக்கப்பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தில் கொள்ளை : 7 பேர் கைது - News View

About Us

About Us

Breaking

Thursday, June 10, 2021

மன்னாரில் நிர்மாணிக்கப்பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தில் கொள்ளை : 7 பேர் கைது

செ.தேன்மொழி

மன்னார் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் காற்றலை மின் உற்பத்தி நிலையத்தில் மின்னிணைப்பிற்கு உபயோகிக்கும் கம்பி கேபிள்களை (cable wire) கொள்ளையிட்டமை தொடர்பில், மின் உற்பத்தி நிலையத்தின் பாதுகாப்பு பிரிவில் கடமை புரிந்து வந்த உத்தியோகத்தர் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், அதே பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது மின் உற்பத்தி நிலையத்திற்கு சொந்தமான 340 மீட்டர் நீளமான கம்பி வடங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இலங்கை மின்சார சபையின் மேற்பார்வையின் கீழ் இடம்பெற்று வரும் காற்றலை மின் உற்பத்தி நிலையத்தின் நிர்மானப் பணிகளை தனியார் நிறுவனம் ஒன்றே முன்னெடுத்து வருகின்றது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்காக பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலைமன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment