514 கிலோ பீடி இலைகள், 70 கிலோ உலர்ந்த மஞ்சளுடன் மன்னாரில் ஒருவர் கைது - News View

Breaking

Post Top Ad

Wednesday, June 9, 2021

514 கிலோ பீடி இலைகள், 70 கிலோ உலர்ந்த மஞ்சளுடன் மன்னாரில் ஒருவர் கைது

மன்னார், வங்காலை கடற்கரை பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கடத்த முயன்ற 514 கிலோ கிராம் பீடி இலைகள் மற்றும் சுமார் 70 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த சுற்றிவளைப்பின்போது சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதன்படி வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர் நேற்று மன்னார், வங்காலை கடற்கரை பகுதியில் சிறப்பு சோதனை நடவடிக்கையொன்றை மேற்கொண்டனர்.

இதன்போதே கடல் வழியாக கடத்தி கடற்கரை அருகிலுள்ள புதர்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 514 கிலோ கிராம் பீடி இலைகள் மற்றும் சுமார் 70 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் பொதிகளுடன் ஒருவரை கடற்படையினர் கைது செய்தனர்.

கொவிட்-19 பரவுவதைத் தடுப்பதுக்காக வழங்கப்பட்ட சுகாதார அறிவுறுத்தல்கள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை மூலம் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் எருக்குளம்பிட்டி பகுதியில் வசிக்கும் 41 வயதானவர் என அடையாளம் காணப்பட்டார்.

குறித்த சந்தேகநபர், பீடி இலைகள் மற்றும் உலர்ந்த மஞ்சள் ஆகியவற்றை மேலதிக விசாரணைகளுக்காக வங்காலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad