ஐ.நா. பொதுச் செயலாளராக மீண்டும் தெரிவாகிறார் ஆன்டனியோ குட்டரெஸ் - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 9, 2021

ஐ.நா. பொதுச் செயலாளராக மீண்டும் தெரிவாகிறார் ஆன்டனியோ குட்டரெஸ்

ஐக்கிய நாடுகள் சபையின் ஒன்பதாவது பொதுச் செயலாளராக போர்த்துக்கலின் முன்னாள் பிரதமரான ஆன்டனியோ குட்டரெஸ் (வயது 72) கடந்த 2017ஆம் ஆண்டு 1 ஆம் திகதி முதல் பதவி வகித்து வருகிறார்.

இவரது பதவிக்காலம் இந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதியுடன் நிறைவடையும் நிலையில், ஐ.நா.வின் அடுத்த பொதுச் செயலாளரை தெரிவு செய்யும் பணிகள் நடந்து வந்தது.

இந்நிலையில் நேற்று நடந்த ஐ.நா.வின் அதிகாரம் மிகுந்த பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஆன்டனியோ குட்டரெசையே மீண்டும் பொதுச் செயலாளராக்குவது என ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஐ.நா.வின் அடுத்த பொதுச் செயலாளராக மீண்டும் ஆன்டனியோ குட்டரெசே தெரிவாகிறார்.

வருகிற 18 ஆம் திகதி நடைபெறும் ஐ.நா.வின் பொதுச் சபை கூட்டத்தில் முறைப்படி அவர் தெரிவு செய்யப்படுவார். அவரது பதவிக் காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் 2026 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரை தொடரவுள்ளது.

No comments:

Post a Comment