திருகோணமலை மாவட்டத்தில் 24 மணித்தியாலத்தில் 60 பேருக்கு கொரோனா, இரண்டு மரணங்கள் - News View

Breaking

Post Top Ad

Thursday, June 10, 2021

திருகோணமலை மாவட்டத்தில் 24 மணித்தியாலத்தில் 60 பேருக்கு கொரோனா, இரண்டு மரணங்கள்

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 60 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள தகவல்கள் தெரிவித்துள்ளது.

திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தினால் நேற்று (09) வெளியிட்டுள்ள கொவிட்19 தொடர்பிலான அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் கிண்ணியா பிரதேசத்தில் 17 தொற்றாளர்களும், குச்சவெளி பிரதேசத்தில் மூன்று பேரும்,கோமரங்கடவல பிரதேசத்தில் 6 தொற்றாளர்களும், குறிஞ்சாங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் ஒருவரும், மூதூர் பிரதேசத்தில் 6 தொற்றாளர்களும் திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் 27 கொரோனா தொற்றாளர்களும் இணங்காணப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 247 பேருக்கு அண்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் 66 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனையை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த ஜூன் மாதம் முதலாம் திகதி தொடக்கம் 8ஆம் திகதி வரை 294 பேருக்கு திருகோணமலை மாவட்டத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை 3719 பேர் கோவிட்19 தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 111 பேர் நேற்று வரைக்கும் உயிரிழந்துள்ளதாகவும், 95 கர்ப்பிணி தாய்மார்களுக்கு தொற்று இனங்காணப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad