தேசிய அடையாள அட்டை அலுவலகத்திற்கு வர அனுமதியில்லை - பரீட்சைகள், வெளிநாடு செல்லுதல் உள்ளிட்ட விடயங்களுக்கு அழைக்கவும் - News View

About Us

About Us

Breaking

Sunday, May 2, 2021

தேசிய அடையாள அட்டை அலுவலகத்திற்கு வர அனுமதியில்லை - பரீட்சைகள், வெளிநாடு செல்லுதல் உள்ளிட்ட விடயங்களுக்கு அழைக்கவும்

ஆட்பதிவு திணைக்களத்தின், தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் ஒரு நாள் சேவை உள்ளிட்ட பொதுமக்கள் தொடர்புறும் அனைத்து சேவைகளும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.

திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியன்னி குணதிலக இதனை அறிவித்துள்ளார்.

பொது இடங்களில் மக்கள் கூடுவதைத் தடுக்கவும், கொவிட் வைரஸ் பரவாமல் தடுக்கவுமான, சுகாதார அமைச்சின் பரிந்துரைகளைத் தொடர்ந்து குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட கிராம அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு விண்ணப்பத்திகாரிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், தே.அ. அட்டைகளை இன்னும் விண்ணப்பிக்காதவர்கள், தங்கள் விண்ணப்பங்களை பிரதேச செயலகங்களிலுள்ள பிராந்திய அலுவலகங்களில் ஒப்படைக்குமாறு அறிவித்துள்ளார்.

இதேவேளை, பரீட்சைகள், நேர்முக பரீட்சைகள், வெளிநாடு செல்லுதல், கடவுச்சீட்டு பெறுதல் உள்ளிட்ட அவசரமான விடயங்களுக்கு பின்வரும் தொலைபேசிகளை அழைக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.

பிரதான அலுவலகம் - 011 5 226 126
தென் மாகாண அலுவலகம் - 091 2 228 348
வடமேல் மாகாண அலுவலகம் - 037 2 224 337
கிழக்கு மாகாண அலுவலகம் - 065 2 229 449
வடக்கு மாகாண அலுவலகம் - 024 2 227 201

No comments:

Post a Comment