ரிஷாட் பதியுதீனை விடுதலை செய்யுமாறு கோரி சாளம்பைக்குளத்தில் ஆர்ப்பாட்டம்! - News View

Breaking

Post Top Ad

Sunday, May 2, 2021

ரிஷாட் பதியுதீனை விடுதலை செய்யுமாறு கோரி சாளம்பைக்குளத்தில் ஆர்ப்பாட்டம்!

மக்கள் காங்கிரஸ் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரரை விடுதலை செய்யுமாறு கோரி, வவுனியா, புதியசாளம்பைக்குளம் பள்ளிவாசலுக்கு முன்பாக இன்று காலை (02) கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், எமது தலைவர் ரிஷாட் பதியுதீனின் ஜனநாயக விரோத கைதினை வன்மையாகக் கண்டிக்கின்றோம். அவர் அதிகாலையில் கைது செய்யப்பட்டதையிட்டு வேதனையடைகின்றோம். அரசாங்கம் தன்னுடைய தோல்வியை மறைப்பதற்காக இவ்வாறான கைதுகளை முன்னெடுத்து வருகின்றது.

அவர் அமைச்சராகவிருந்த காலம்தொட்டு பல்வேறு அபிவிருத்திகளை வன்னி மாவட்டத்திலே முன்னெடுத்தவர். எனவே அவர் விடுதலை செய்யப்பட வேண்டும். நாட்டின் ஆட்சியாளர்கள் இந்த விடயத்தில் கவனம் செலுத்தவேண்டும்” என்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad