உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு இன்று வெளியாகிறது! - News View

Breaking

Post Top Ad

Monday, May 3, 2021

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு இன்று வெளியாகிறது!

2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று மாலை வெளியிடப்படும் என்று பரீட்சைத் திணைக்களத்துக்கு நெருக்கமான வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

அதன்படி உயர்தரப் பரீட்சை முடிவுகள் இன்றிரவுக்கு முன்னர் எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம்.

2020 க.பொ.த. உயர்தரப் பரீட்சை முடிவுகளை கடந்த ஏப்ரல் மாதம் 30 க்கு முன்னர் வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால் இசட் மதிப்பெண் கணக்கீடு இரட்டை சோதனை செயல்முறை காரணமாக அது ஒரு வாரம் தாமதமானது.

பரீட்சை திணைக்கள அதிகாரிகளின் கூற்றுப்படி பெறுபேறுகள் வெளியிடும் ஏற்பாடுகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன, அது இன்று வெளியிடப்படும். வெளியிடப்படும் முடிவுகளை கல்வியமைச்சின் www.doenets.lk என்ற வலைத்தளத்தில் பார்வையிடலாம்.

வெளியாகும் முடிவுகளின் அடிப்படையில், 2021 செப்டம்பர் மாதத்துக்குள் மாணவர்களை பல்கலைக்கழகங்களில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

2020ஆம் ஆண்டு ஓகஸ்டில் உயர்தரப் பரீட்சை இடம்பெறவிருந்த நிலையில் கொரோளா தொற்று அச்சுறுத்தல் காரணமாக பரீட்சை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இதற்கமைவாக, கடந்த வருடம் ஒக்டோபர் 12ஆம் திகதி ஆரம்பமான உயர்தரப் பரீட்சைகள் நவம்பர் ஆறாம் திகதி வரை நடைபெற்றது.

இம்முறை உயர்தரப் பரீட்சையில் மூன்று இலட்சத்து 62ஆயிரத்து 824 மாணவர்கள் தோற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad