பல தசாப்தங்களாக கல்வியளாளர்களையும் பட்டதாரிகளையும் உருவாக்கிய IDM Nation Campus கல்வி நிறுவனத்தின் 2020-2021 ஆண்டுக்கான பட்டமளிப்பு விழா நாளை (03) சனிக்கிழமை மதியம் 12:30 க்கு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
கல்வி நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி ஜனகன் விநாயகமூர்த்தி தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், பிரதம அதிதியாக இலங்கை சட்டக் கல்லூரி அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி திருமதி பத்மினி இந்திர சமரசிங்க கலந்து கொள்வதோடு மற்றும் பல கல்விமான்களும் கலந்து சிறப்பிக்கள்ளனர்.
இப் பட்டமளிப்பு விழாவில் 700க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சட்டத்துறை மற்றும் ஏனைய துறைகளில் இளமாணி, முதுமாணி பட்டங்கள் வழங்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment