சிறுவர்கள் மத்தியில் Hand-foot-and-mouth disease நோய், ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு மிக விரைவாக பரவும் - பெற்றோர்களே அவதானம்...! - News View

About Us

About Us

Breaking

Friday, April 30, 2021

சிறுவர்கள் மத்தியில் Hand-foot-and-mouth disease நோய், ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு மிக விரைவாக பரவும் - பெற்றோர்களே அவதானம்...!

தற்பொழுது நாட்டில் கொவிட்19 வைரஸ் உள்ளிட்ட புதிய நோய்கள் பல காணக்கூடியதாக இருப்பதாக கொழும்பு ரிஜ்வே வைத்தியசாலை சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று (30) ஊடகங்கள் மத்தியில் இந்த விடயத்தை குறிப்பிட்ட அவர் டெங்கு நோயை போன்று வைரஸ் காய்ச்சலை போன்று விசேடமாக இம்முறையும் Hand-foot-and-mouth disease என்ற நோயை பெருமளவில் காணக்கூடியதாக இருப்பதாக விசேட வைத்தியர் சுட்டிக்காட்டினார்.

Hand-foot-and-mouth disease, என்ற இந்த நோய் எக்காலப்பகுதியிலும் காணக்கூடிய நோயாகும். அத்தோடு 6 மாதங்களுக்கு மேற்பட்ட மற்றும் 5 தொடக்கம் 6 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மத்தியில் இந்த நோயைக் காணக்கூடியதாக உள்ளது.

கைகள், வாயைச்சுற்றியும், வாய்குள்ளும் கால்களிலும், சிகப்பு நிற புள்ளிகளை காணக்கூடியதாக இருக்கும் என்றும், 2 தினங்கள் மாத்திரம் காய்ச்சல் நிலை, குறைவடைந்த 7 தொடக்கம் 10 தினங்களுக்கு உட்பட்ட காலப்பகுதியில் சிகப்பு புள்ளிகளை காண முடியும் என்றும் அவர் கூறினார்.

10 வயது வரையிலுமான சிறுவர்கள் மத்தியில் இந்த நோய் ஏற்படக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதன்போது உடல் சோர்வு, உணவில் வெறுப்பு, இயலாமை போன்ற நிலைமைகளை காணக்கூடியதாக இருக்கும். உணவில் வெறுப்பு ஏற்படுவதினால் நீரிழப்பு நிலைக்கும் சிறுவர்கள் தள்ளப்படுவார்கள். 

விசேடமாக இந்த நோய் சிறுவர்களில் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு மிக விரைவாக பரவக்கூடும். இனால் இந்த நோய்குள்ளான சிறுவர்களை ஏனைய சிறுவர்களில் இருந்து தனிமைப்படுத்தி வைத்திருக்க வேண்டும். 

திரவ உணவு வகைகளை வழங்க வேண்டும். அளவான பெரசிட்டமோல் குழுசைகளை மாத்திரம் வழங்க வேண்டும். இந்த நோய் குணமடைந்த பின்னர் கை, கால்களிலுள்ள நகங்கள் கழற்று போகும் நிலையும் ஏற்படக்கூடும். இதனால் அச்சம் கொள்ளத் தேவையில்லை. இதற்கு சிகிச்சை மேற்கொள்வதுடன் சிறுவர்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

காலத்துக்கு காலம் இந்த நோய் உலகில் பல நாடுகளில் காணக்கூடியதாக உள்ளது. நோயின் ஆரம்பத்திலேயே இதைப்பற்றி தெளிவுப்படுத்துவது ஏனெனில், இது கொவிட் நோயல்ல. 3 நாட்களுக்கு காய்ச்சல் இருக்குமாயின் பரிசோதனை மேற்கொண்டு நோய் நிலைமை டெங்கா? என்பதை கண்டறிய முடியும். 

இந்த நோய் இருக்குமாயின், நோய் இருப்பவரை தனிமைப்படுத்தி ஓய்வாக வைத்திருப்பது அவசியமாகும். 6 மாதங்களுக்கு தாய்ப்பால் வழங்கப்படுவதினால் இந்த காலப்பகுதியில் இந்த குழந்தைகளுக்கு இந்நோய் ஏற்படாது. 

இருப்பினும், இந்த நோயை சிறுவர்கள் மத்தியில் கொண்டு செல்வது முதியவர்களாவர். கொவிட் நிலைமையை போன்றே இதன்போது கைகளை சுத்தமாக வைத்திருத்தல், சமூக இடைவெளியை பேணுதல், முகக்கவசங்களை முறையாக அணிதல் முதலானவற்றை மேற்கொள்ள வேண்டும். கைகளை சுத்தமாக வைத்திருப்பதினால் கூடுதலான வைரஸ்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.

தற்போதைய கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக கருத்து தெரிவித்த தீபால் பெரேரா, தற்பொழுது பரவிவரும் கொவிட்19 தொற்று இளஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கு தொற்றக்கூடும். இதனால் வயதானவர்கள் இது குறித்து சிந்தித்து செயற்பட வேண்டும். 

வீடுகளில் இருக்கும் சிறுவர்களை பாதுகாக்கும் பொறுப்பு இவர்களுக்கு உண்டு. வீடுகளில் இருக்கும் குழந்தைகளிடம் நோயை கொண்டு செல்பவர்கள் வயதானவர்கள். 

எனவே அலுவலகங்களில் கடமை புரியும் போதும் பயணங்களின் போதும் அவதானத்துடன் செயற்பட வேண்டும். சுகாதார வழிகாட்டி ஆலோசனைக்கு அமைய செயற்படுவோமாயின், தற்பொழுது சிறுவர்களை பாதுகாக்க முடியும். இது வயதானவர்களுக்கு உள்ள பொறுப்பாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment