யாழ். நகரில் தொற்று இல்லாதவர்களின் கடைகளை திறக்க அனுமதி! - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 7, 2021

யாழ். நகரில் தொற்று இல்லாதவர்களின் கடைகளை திறக்க அனுமதி!

யாழ். நகர வர்த்தகர்களிடம் பெறப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் கடைகள் தவிர்ந்த ஏனைய கடைகளை நாளை (வியாழக்கிழமை) திறக்க அனுமதி வழங்கியுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

கொரோனா நிலமைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”கடந்த 26ஆம் திகதி முதல் யாழ் நகரத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு வர்த்தக நிலையங்களில் பணியாற்றுவோர் தனிமைப்படுத்தலுக்குள்ளாக்கப்பட்ட நிலையில் கடந்த 14 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட இரண்டு பி.சி.ஆர் பரிசோதனைகளில்தொற்று இனங்காணப்பட்டோரின் கடைகள் தவிர்ந்த ஏனைய கடைகளை நாளை (வியாழக்கிழமை) காலை முதல் திறப்பதற்கு அனுமதிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நேற்று அவசரமாக கூடிய யாழ் மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியில் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டதாக வர்த்தகர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் தொற்று உறுதி செய்யப்பட்டோர் தவிர்ந்த ஏனையோரின் கடைகளை நாளை முதல் திறப்பதற்கு அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் தற்போது பண்டிகை காலம் என்பதால் மக்கள் வழமை போன்று ஒன்று கூடல் செயற்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்க்கவேண்டும் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

அத்தோடு யாழ் நகரப் பகுதிகளில் வீதித் தடைகளை ஏற்படுத்தி பொதுமக்களை ஒன்று கூடாத வண்ணம் செயற்படவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு தற்போது அபாய நிலை இன்னும் நீங்கவில்லை எனவே தற்போதைய நிலையில் பொது மக்களை ஒன்று கூடலை தடுப்பதற்கு ரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாகவும்’ அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment