வவுனியாவில் இராணுவம் என தெரிவித்து பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் கொள்ளை - News View

Breaking

Post Top Ad

Wednesday, April 7, 2021

வவுனியாவில் இராணுவம் என தெரிவித்து பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் கொள்ளை

வவுனியா நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாரதிபுரம் பகுதியில் சொகுசு காரில் வந்த நபர்கள் தாம் இராணுவம் என தெரிவித்து பல இலட்சம் பெறுமதியான பொருட்களை களவாடிச் சென்றுள்ளனர்.

பாரதிபுரம் பகுதியில் நேற்று (06) மதியம் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், சொகுசு காரில் வந்த சில நபர்கள் தாம் இராணுவம் என அடையாள அட்டையினை காட்டியதுடன் வீட்டினை சந்தேகிக்கிடமான பொருட்கள் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் வீட்டினை பரிசோதனை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்து வீட்டினுள் சென்று வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்தி வீட்டினுள் காணப்பட்ட பல இலட்சம் பெறுமதியான நகைகள், வீட்டினுள் காணப்பட்ட சில பொருட்கள் என்பவற்றினை களவாடிச் சென்றுள்ளனர்.

பகல் நேரத்தில் இடம்பெற்ற இவ் கொள்ளைச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் இரானுவத்தினரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் இராணுவம், பொலிஸார் என தெரிவித்து நான்கு வீடுகளில் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா தீபன்

No comments:

Post a Comment

Post Bottom Ad