பிரேசிலில் உடல்களை அடக்கம் செய்ய கல்லறைகளுக்கு பெரும் தட்டுப்பாடு ! - News View

About Us

About Us

Breaking

Saturday, April 3, 2021

பிரேசிலில் உடல்களை அடக்கம் செய்ய கல்லறைகளுக்கு பெரும் தட்டுப்பாடு !

கொரோனாவால் இறந்தவர்களை அடக்கம் செய்ய பிரேசிலில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பழைய கல்லறைகளை சுத்தம் செய்து புதிய உடல்களை அடக்கம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

பிரேசிலில் நாளாந்தம் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்படுகின்ற நிலையில் நாளொன்றுக்கு சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர்.

இதனால் பிரேசிலின் மிகப்பெரிய நகரமான சாவோ பவுலோ நகரில் கொரோனாவால் இறந்தவர்களை அடக்கம் செய்ய கல்லறைகளில் இடப்பற்றாக்குறை நிலவுகின்றது.

இந்நிலையில், ஏற்கனவே இருக்கும் கல்லறைகளை அகழ்ந்து அவற்றில் இருக்கும் மனித எச்சங்களை அகற்றி விட்டு புதிய உடல்களை அங்கு அடக்கும் நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment