பிலிப்பைன்ஸில் கொரோனா கட்டுப்பாட்டை மீறிய ஆடவர் தண்டனையால் மரணம் - News View

Breaking

Post Top Ad

Wednesday, April 7, 2021

பிலிப்பைன்ஸில் கொரோனா கட்டுப்பாட்டை மீறிய ஆடவர் தண்டனையால் மரணம்

பிலிப்பைன்ஸில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறியதற்காக பொலிஸார் 300 தடவை தோப்புக்கரணம் போடுவது போன்ற தண்டனை வழங்கியதால் ஆடவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கவிட் மாகாணத்தில் கடந்த வியாழக்கிழமை இரவு நேரத்தில் தண்ணீர் வாங்கச் சென்றபோது டரென் மனோக் பனரடொன்டோ என்ற ஆடவர் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.

அடுத்த நாள் மயங்கி விழுந்த அவர் பின்னர் உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த கவிட் மாகாணத்தில் தற்போது கடுமையான கட்டுப்பாடுகள் அமுலில் உள்ளன.

ஊரடங்குச் சட்டத்தை மீறுபவர்களுக்கு உடல் ரீதியில் தண்டனை அளிக்க முடியாது என்றும் அதிகாரிகளால் அறிவுறுத்தல் விடுக்க மாத்திரமே முடியும் என்றும் ட்ரியஸ் நகர பொலிஸ் தலைவர் மார்லோ சொலேரோ தெரிவித்துள்ளார்.

எனினும் ஊரடங்குச் சட்டத்தை மீறிய பனரடொன்டோவுக்கு தோப்புக்கரணம் போன்ற உடற்பயிற்சியை பொலிஸார் தண்டனையாக வழங்கி இருப்பதாக அவரது உறவினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். 

வெள்ளிக்கிழமை காலையில் உடல் வருத்தத்துடன் பனரடொன்டோ வீட்டுக்கு வந்ததாக அவரது சகோதரர் தெரிவித்துள்ளார். நகர முடியாது வேதனையில் இருந்த அவர் மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad