மாகாண சபை தேர்தலை நிறுத்துமாறு பௌத்த மத அமைப்புகள் கோரிக்கை - ஜனாதிபதி, பிரதமர், அரசுக்கு திறந்த மடல் - News View

Breaking

Post Top Ad

Thursday, April 8, 2021

மாகாண சபை தேர்தலை நிறுத்துமாறு பௌத்த மத அமைப்புகள் கோரிக்கை - ஜனாதிபதி, பிரதமர், அரசுக்கு திறந்த மடல்

நிபுணத்துவ குழுவின் யோசனைகளை புறந்தள்ளி, நாட்டு மக்களின் இறைமையை மீறி அவசரமாக மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்காக மேற்கொள்ளும் முயற்சிகளை கைவிடுமாறு அரசாங்கத்தையும் மக்களையும் கேட்டுக் கொள்வதாக பௌத்த மத அமைப்புகள் ஒன்றிணைந்து ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கத்திற்கு திறந்த மடலொன்றை அனுப்பி வைத்துள்ளன.

மாகாண சபை தேர்தல் சட்டத்தை விரைவாக திருத்துவதானது நாட்டு மக்களின் இறைமையை மீறும் செயலாகுமென இத்தேபானே தம்மாலங்கார மகாநாயக்க தேரர், தொடம்பஹல சந்ரஸ்ரீ மகாநாயக்க தேரர் ஆகியோர் உள்ளிட்ட பௌத்த மதத் தலைவர்கள் உள்ளிட்ட சில அமைப்புகள் தெரிவித்துள்ளன.

அந்த திறந்த மடலில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது புதிய அரசியலமைப்பை கொண்டுவருவதற்கு முன்பதாக மாகாண சபை தேர்தலுக்கான சட்டத்தை விரைவாக திருத்துதல் மற்றும் மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவது தொடர்பில் கடந்த அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

படையினர் பெரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு 30 வருட யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ள நிலையில் எமக்கு அந்த அமைதியான சூழலில் தொடர்ந்தும் வாழ முடியாமல் போயுள்ளது. 

2019ஆம் ஆண்டு தாக்குதலுடன் மேலும் தீவிரவாத அமைப்புகள் சில மக்களை அடிமைப்படுத்தியுள்ளன. கிழக்கு மாகாணத்தில் பிறந்துள்ள மேற்படி இஸ்லாமிய பயங்கரவாதிகள் சர்வதேச தீவிரவாதத்துடன் கைகோத்துக் கொண்டு செயற்பட்டுள்ளனர். அந்த நிலையில் அதன் சூத்திரதாரிகள் யார் என்பது இன்னும் வெளிப்படாத இரகசியமாகவே உள்ளது.

மாகாண சபை தேர்தல் நடத்தப்பட்டு மீண்டும் மாகாண சபைகள் செயற்பட்டால் 13ஆவது அரசியலமைப்பு திருத்தங்களுக்கு இணங்க அரசாங்கம் செயற்பட நேரும். ஆயுதம் வெடி பொருட்கள் உள்ளிட்ட விவரங்களை தன்வசம் வைத்துக் கொள்வதற்கு அவர்களுக்கு உரிமை கிடைத்துவிடும். 

அவ்வாறு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் தெரிவு செய்யப்படும் முதலமைச்சரின் அபிலாசைகள் எவ்வாறு இருக்கும் என்பது இப்போது வெளிப்படுகிறது. 

கடந்த மாகாண சபையில் வட மாகாண முதலமைச்சராக செயற்பட்ட விக்னேஸ்வரன் இனவாதமாக செயற்பட்டமை, வடக்கில் பௌத்த வழிபாட்டுத் தலங்கள் தொடர்பில் மேற்கொண்ட நடவடிக்கைகள் நாம் மறந்து விட முடியாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment

Post Bottom Ad