சீகிரியா பிரதேசத்தில் காட்டு யானை திடீர் உயிரிழப்பு - உடலில் பழைய துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் - News View

Breaking

Post Top Ad

Thursday, April 8, 2021

சீகிரியா பிரதேசத்தில் காட்டு யானை திடீர் உயிரிழப்பு - உடலில் பழைய துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள்

சீகிரிய - இந்திக்க வெவ பாதுகாப்பு வனப் பிரதேசத்திற்கு சமீபமாக நேற்று அதிகாலை வேளையில் இறந்த நிலையில் காட்டு யானையொன்று மீட்கப்பட்டதாக சீகிரிய வனஜீவி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இறந்து கிடந்த யானை சுமார் 40 வயதுடைய, மூன்று மீற்றர் உயரமுடையதென வனஜீவி அதிகாரிகள் தெரிவித்தனர். குறித்த யானையின் உயிரிழப்பிற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை எனக் குறிப்பிட்டனர்.

எனினும் உயிரிழந்த யானையின் உடல் முழுதும் பழைய துப்பாக்கிச் சூட்டுக் காயங்களின் வடுக்களைத் தம்மால் அவதானிக்க முடிந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கிரித்தலைப் பிரதேச மிருக வைத்திய அதிகாரிகளினால் யானையின் பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தம்புள்ள தினகரன் நிருபர்

No comments:

Post a Comment

Post Bottom Ad