சாய்ந்தமருதில் மீனவர்கள் மின்னலுக்கு பலி : ஜனாஸாக்கள் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சேர்ப்பு !! - News View

Breaking

Post Top Ad

Friday, April 30, 2021

சாய்ந்தமருதில் மீனவர்கள் மின்னலுக்கு பலி : ஜனாஸாக்கள் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சேர்ப்பு !!

நூருல் ஹுதா உமர்

சாய்ந்தமருதில் இருந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மீன்பிடிக்காக கடலுக்கு சென்ற இரு மீனவர்கள் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி ஜனாஸாவாக கரைதிரும்பிய சோகம் இன்று இரவு சாய்ந்தமருதில் பதிவானது. 

கடலில் தங்கியிருந்து மீன்பிடிக்கும் தொழிலை செய்துவந்த இவர்கள் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி மரணித்ததாக இவர்களுடன் கடலுக்கு மீன்பிடிக்க சென்றவர் தெரிவித்தார்.

சாய்ந்தமருதை சேர்ந்த அன்ஸார் என்றழைக்கப்படும் இப்ராஹிம் இக்பால் (வயது-42), எம்.எஸ். அர்சாத் (வயது-35) ஆகியோரே மின்னலுக்கு இலக்காகி மரணித்துள்ளதுடன் இவர்களின் ஜனாஸாக்கள் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. 

மேலும் காயமடைந்த இப்ராஹிம் மன்சூர் (வயது-43) மரணித்த (இப்ராஹிம் இக்பாலின் சகோதரர்) கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் சாய்ந்தமருதில் சோகம் நிலவிவருகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad