வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் சச்சின் டெண்டுல்கர் - News View

Breaking

Post Top Ad

Friday, April 2, 2021

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் சச்சின் டெண்டுல்கர்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சச்சின் டெண்டுல்கர் கொரோனா தொற்றுக்குள்ளாகி வீட்டிலிலே ஆறு நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்ட பின்னர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

47 வயதான சச்சின் டெண்டுல்கர் இந்த அறிவிப்பினை இன்று அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

"உங்கள் பிரார்த்தனைகளுக்கும் நன்றி. மருத்துவ ஆலோசனையின் கீழ் முன்னெச்சரிக்கையாக நான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். சில நாட்களில் வீடு திரும்புவேன் என்று நம்புகிறேன். அனைவரும் தங்களை கவனித்துக் கொள்ளுங்கள், பாதுகாப்பாக இருங்கள்" என அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.

டெண்டுல்கருக்கு மார்ச் மாதம் 27 ஆம் திகதி கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு அவர் வீட்டில் தனிமைப்படுத்திலில் இருந்தார்.

2011 ஆம் ஆண்டில் இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க உலகக் கிண்ண வெற்றியின் ஒரு பகுதியாக இருந்த துடுப்பாட்ட ஜாம்பவான், வெற்றியின் 10 ஆவது ஆண்டு விழாவில் தனது அணியினருக்கும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad