கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்ட 317 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கம் - News View

Breaking

Post Top Ad

Friday, April 30, 2021

கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்ட 317 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கம்

317 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கத்தை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்கப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

26 கிலோ எடையுள்ள இந்த தங்கமானது பிஸ்கட்களாகவும் ஆபரணங்களாகவும் கொண்டுவரப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர், சுங்கப் பணிப்பாளர் சுதந்த சில்வா தெரிவித்தார்.

கட்டாரிலிருந்து வருகை தந்த பயணி ஒருவரால் விமான நிலைய கழிவறைக்குள் வைத்து, மிக சூட்சுமமாக விமான நிலைய சுத்திகரிப்பு பணியில் ஈடுபடும் ஒருவரிடம் கொடுத்து தங்கத்தை வௌியில் கொண்டு செல்ல முயற்சித்த போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தங்கத்தை வௌியில் கொண்டு செல்ல முயற்சித்த சுத்திகரிப்பு பணியாளரும் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad