யாழில் 2 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப் பொருளுடன் குடும்பஸ்தர் கைது - News View

Breaking

Post Top Ad

Friday, April 2, 2021

யாழில் 2 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப் பொருளுடன் குடும்பஸ்தர் கைது

50 கிராம் ஐஸ் போதைப் பொருளை உடமையில் வைத்திருந்ததாக குடும்பத் தலைவர் ஒருவர் யாழ். காங்கேசன்துறை குற்றத் தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெல்லிப்பழை கட்டுவனைச் சேர்ந்த 49 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு இன்று அதிகாலை ஒரு மணியளவில் கைது செய்யப்பட்டதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர்.

காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான குற்றத் தடுப்பு பொலிஸ் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையிலேயே சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

சுமார் 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான 50 கிராம் ஐஸ் போதைப் பொருள் சந்தேக நபரிடம் இருந்து கைப்பற்றப்பட்டது.

சந்தேகநபர் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்ததுடன் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad