இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்ப துறையில் புதிய தொழில் வாய்ப்புடனான பட்டப்படிப்பு - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 31, 2021

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்ப துறையில் புதிய தொழில் வாய்ப்புடனான பட்டப்படிப்பு - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு

வரலாற்றிலே முதன் முறையாக கலை, வணிகம், விஞ்ஞானம், கணிதம் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய ஏதேனும் ஒரு துறையில் S சித்தி பெற்ற மாணவர்களுக்கும் பட்டமொன்றைப் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சம்பத் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் computer science தொடர்பான புதிய தொழில் சார்ந்த பாடநெறிக்கு 10 ஆயிரம் மாணவர்களை இணைத்துக் கொள்வது தொடர்பாக தெளிவூட்டுவதற்காக நேற்று (30) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.

புதிய தொழில் சந்தைக்கு பொருத்தமானவர்களா என்பது எமது நாட்டு பட்டதாரிகளுக்கு வரும் குற்றச்சாட்டாகும். இதன்படி திறந்த பல்கலைக்கழகம் மற்றும் வியாபாரத் துறையுடன் இணைந்து அவர்களின் ஆலோசனைகள் மற்றும் வியாபாரத் துறையை தொடர்புபடுத்தி இந்த புதிய பாடநெறியை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

க.பொ.த உயர்தர பரீட்சையில் சித்தியடையாத, மற்றும் சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களும் நுழைவு பரீட்சைக்கு முகம் கொடுப்பதன் மூலம் இந்தப் பாடநெறியை தொடர சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், தூர பிரதேச மாணவர்கள் தமது பிரதேசங்களை விட்டு கொழும்புக்கு வருகை தர வேண்டியதில்லை. தொழில் செய்பவர்கள் கூட இந்தப் பட்டப் படிப்பை மேற்கொள்ள முடியும் என்பதாகவும், மாணவர்களால் ஏற்றுக் கொள்ளக் கூடிய சாதாரண பாடநெறி கட்டணமொன்று அறவிடப்படும் என்றும் தலைவர் தெளிவு படுத்தினார்.

கடந்த வருடம் மூன்று லட்சம் மாணவர்கள் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியிருந்ததுடன், அவர்களில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் மாணவர்கள் மாத்திரமே பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர். இதில் அரசாங்க பல்கலைக்கழகங்களுக்கு 41,500 மாணவர்கள் தெரிவாகியுள்ளனர். 

ஏணைய மாணவர்களுக்கு கல்வியை தொடர்வதற்கான தேவை இருந்தபோதிலும் அதற்கான சந்தர்ப்பங்கள் கிடைப்பதில்லை. எனவே இந்தப் புதிய பட்டபடிப்பானது இதற்கான சிறந்ததொரு சந்தர்ப்பமாகும்.

No comments:

Post a Comment