இந்திய, பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதி ஊடுருவலுக்கு அமெரிக்கா கண்டனம் - News View

About Us

About Us

Breaking

Thursday, March 11, 2021

இந்திய, பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதி ஊடுருவலுக்கு அமெரிக்கா கண்டனம்

இந்திய, பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சிப்பதை அமெரிக்கா வன்மையாக கண்டித்துள்ளது.

அத்துடன், இந்திய, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்குமிடையில் கஷ்மீர் தொடர்பான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கான கரிசனைகளையும் அமெரிக்கா கொண்டிருக்கின்றது.

இதேநேரம், ஜம்மு-கஷ்மீரில் ஏற்பட்டு வரும் முன்னேற்றகரமான செயற்பாடுகளை நாம் மிக நெருக்கமாக அவதானித்து வருகின்றோம் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் நெட் பிரைஸ் தெரிவித்துள்ளார்.

2003ஆம் ஆண்டு இந்திய - பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் போரை முடிவுக்கு கொண்டுவருவதன் மூலம் இரு தரப்பிருக்குமிடையிலான பதற்றங்களை குறைப்பதற்கு எம்மால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதேநேரம், பிராந்தியத்திற்கான அரசாங்கத்தின் கொள்கை மாறவில்லை. ஆனால், எல்லைக்கோட்டு வழியாக ஊடுருவ முற்படும் பயங்கரவாதிகளை அமெரிக்கா மிகக் கடுமையாக கண்டிக்கின்றது.

அத்துடன் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நேரடியான கலந்துரையடலை நாம் தொடர்ந்தும் ஆதரிக்கின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment