கொவிட் ஜனாசாக்களை ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் நல்லடக்கம் செய்ய நடவடிக்கை - அவசரமாக ஒழுங்குகளை மேற்கொள்ள குழு நியமனம் - News View

Breaking

Post Top Ad

Thursday, March 4, 2021

கொவிட் ஜனாசாக்களை ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் நல்லடக்கம் செய்ய நடவடிக்கை - அவசரமாக ஒழுங்குகளை மேற்கொள்ள குழு நியமனம்

எஸ்.எம்.எம்.முர்ஷித்

கொவிட் தொற்றினால் மரணிப்பவர்களின் ஜனாசாக்களை ஓட்டமாவடி, கோறளைப்பற்று, பிரதேச சபைக்குட்பட்ட ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு பிரதேச செயலகத்திடம் இருந்து பெறப்பட்ட பத்து ஏக்கர் காணியில் நல்லடக்கம் செய்வதற்கான ஒழுங்குகள் நடைபெற்று வருகின்றன.

இது தொடர்பான ஒழுங்குகளை மேற்கொள்வதற்காக காத்தான்குடி ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் கல்குடாத் தொகுதி முஸ்லீம் பிரதேச பள்ளிவாயல்களின் பிரதிநிதிகள் மற்றும் பொது அமைப்பக்களின் பிரதிநிதிகள் ஆகியோர்களை உள்ளடக்கிய குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது

இது தொடர்பான கூட்டம் ஓட்டமாவடி பிரதேச சபை மண்டபத்தில் நேற்று (04.03.2021) இரவு நடைபெற்றது. 

ஓட்டமாவடி பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எம்.நெளபர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் காத்தான்குடி ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பிரதிநிதிகள்,  கல்குடா தொகுதி முஸ்லீம் பிரதேச பள்ளிவாயல்களின் பிரதிநிதிகள் மற்றும் பொது அமைப்பக்களின் பிரதிநிதிகள்,  ஒட்டமாவடி பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர்கள் சுகாதார அதிகாரிகள் இராணுவ உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது கொவிட் தொற்றினால் மரணிப்பவர்களின் ஜனாசாக்களை குறித்த காணியில் அடக்கம் செய்வதற்கான ஒழுங்குகளை அவசரமாக மேற்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு அரசுக்கும் சுகாதார திணைக்களத்துக்கும் ஒத்துழைப்புக்களை வழங்குவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

தற்போது மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் 10 கொவிட் ஜனாசாக்கள் குளிரூட்டிகளிலும் பிரேத அறைகளிலும் உள்ளதாகவும் இந்த ஜனாசாக்களை இன்னும் ஒரு சில தினங்களில் குறித்த காணியில் நல்லடக்கம் செய்வதற்குறிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட குழு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

No comments:

Post a Comment

Post Bottom Ad