70 இலட்சம் ரூபா பெறுமதியான காரை கொள்ளையிட்டவர் ஜி.பி.எஸ். உதவியுடன் சிக்கினார்..! - News View

Breaking

Post Top Ad

Thursday, March 11, 2021

70 இலட்சம் ரூபா பெறுமதியான காரை கொள்ளையிட்டவர் ஜி.பி.எஸ். உதவியுடன் சிக்கினார்..!

(எம்.மனோசித்ரா)

விபஸ்ஸனா பாவனா மத்திய நிலையத்தின் விகாராதிபதி உடுதும்பர காஷ்யப தேரரின் சொகுசு காரை கொள்ளையடித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தங்கம பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த செவ்வாய்கிழமை (09.03.2021) மாலை 7.15 மணியளவில் தலவத்துகொட இலங்கை வங்கிக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்தபோதே குறித்த கார் கொள்ளையடிக்கப்பட்டது.  

எனினும் கொள்ளையடிக்கப்பட்டு சுமார் அரை மணித்தியாலத்திற்குள் அதனை மீட்டு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தலங்கம பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

காரில் பொறுத்தப்பட்டிருந்த ஜி.பி.எஸ். தொழிநுட்பத்தை பயன்படுத்தி கலல்கொட கிராமோதய மாவத்தையில் அது மீட்க்கப்பட்டுள்ளது. 

காரை பொலிஸார் கைப்பற்றிய போது அதில் இலக்க தகடு அகற்றப்பட்டிருந்ததோடு, ஜி.பி.எஸ். கருவியை அகற்றுவதற்கு பதிலாக வாகனத்தின் பிரிதொரு பகுதியும் அகற்றப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்ட காரின் பெறுமதி 70 இலட்சம் ரூபாவாகும். 

இதன் போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 23 வயதுடைய கலல்கொட பிரதேசத்தை சேர்ந்தவராவார். தலங்கம பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad