தமிழக சட்ட சபைத் தேர்தல் : மக்கள் நீதி மய்யம் 154 தொகுதிகளில் போட்டி, தலா 40 இடங்களில் களம் காணும் ஐ.ஜே.கே - ச.ம.க! - News View

Breaking

Post Top Ad

Monday, March 8, 2021

தமிழக சட்ட சபைத் தேர்தல் : மக்கள் நீதி மய்யம் 154 தொகுதிகளில் போட்டி, தலா 40 இடங்களில் களம் காணும் ஐ.ஜே.கே - ச.ம.க!

தமிழக சட்ட சபைத் தேர்தல் ஏப்ரல் 6ம் திகதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்து வருகின்றன.

தமிழக சட்ட சபைத் தேர்தலில் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி மற்றும் ரவி பச்சமுத்துவின் இந்திய ஜனநாயக கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி 154 இடங்களிலும், ச.ம.க மற்றும் ஐ.ஜே.கே ஆகியவை தலா 40 இடங்களில் போட்டியிட உள்ளன. இதற்கான ஒப்பந்தம் சென்னையில் கையெழுத்தாகி உள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் பொதுச் செயலாளர் குமரவேல், சமக சார்பில் சரத்குமாரும், ஐஜேகே சார்பில் ரவி பச்சமுத்துவும் கையெழுத்திட்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad