மெக்ஸிகோவில் பதுங்கியிருந்து காவல் அதிகாரிகள் மீது தாக்குதல் - 13 பேர் பலி - News View

About Us

About Us

Breaking

Friday, March 19, 2021

மெக்ஸிகோவில் பதுங்கியிருந்து காவல் அதிகாரிகள் மீது தாக்குதல் - 13 பேர் பலி

மெக்ஸிக்கோவின் தலைநகருக்கு வெளியே சிறிது தூரத்தில் பதுங்கியிருந்த துப்பாக்கி ஏந்தியவர்கள் மேற்கொண்ட தாக்குதல் காரணமாக 13 மெக்சிகன் காவல் அதிகாரிகள் உயிரழந்துள்ளனர்.

மெக்ஸிகோ நகரத்திற்கு தென்மேற்கே 125 கி.மீ (78 மைல்) தொலைவில் உள்ள கோடெபெக் ஹரினாஸ் நகராட்சியில் வியாழக்கிழமை பிற்பகல் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கோட்டெபெக் ஹரினாஸ் நகராட்சியில் லானோ கிராண்டே பகுதியில் சந்தேகத்திற்கிடமான கும்பல் உறுப்பினர்கள் அந்த பகுதியில் ரோந்து சென்றபோது பாதுகாப்புப் படையினரின் வாகனங்களை தாக்கியதாக மெக்சிகோ மாநில பாதுகாப்பு அமைச்சர் ரோட்ரிகோ மார்டினெஸ்-செலிஸ் கூறினார்.

இது மெக்சிகன் அரசுக்கு அவமரியாதை, நாங்கள் முழு சக்தியுடனும் சட்டத்தின் ஆதரவிலும் பதிலளிப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.

கொல்லப்பட்ட அதிகாரிகளில் எட்டு பேர் அரச காவல்துறையினர் ஆவர். ஏனைய 5 பேர் அரசு வழக்குரைஞர் அலுவலகத்திற்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் ஆவர்.

இந்த சம்பவத்தில் எத்தனை சந்தேகத்திற்குரிய குற்றவாளிகள் கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை. 

அதேநேரம் நாட்டின் முக்கிய போதைப் பொருள் விற்பனையாளர்களில் யாராவது சம்பந்தப்பட்டிருக்கிறார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment