வன்செயலால் ஏற்பட்ட பாதிப்புக்கான இழப்பீடு கோரி 1,333 பேர் விண்ணப்பிப்பு - News View

Breaking

Post Top Ad

Tuesday, March 9, 2021

வன்செயலால் ஏற்பட்ட பாதிப்புக்கான இழப்பீடு கோரி 1,333 பேர் விண்ணப்பிப்பு

வன்செயலால் ஏற்பட்ட பாதிப்புக்கான இழப்பீடுகளை கோரி வவுனியாவில் ஆயிரத்து 333 பேர் விண்ணப்பித்துள்ளதாக மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் தெரிவித்தார்.

1985ஆம் ஆண்டு முதல் நாட்டில் இடம்பெற்ற வன்செயல் மற்றும் யுத்தத்தால் உயிரிழப்பு மற்றும் உடல் அபயங்களை இழந்தோர், சொத்துக்களை இழந்தோர், வழிபாட்டிடங்களின் அழிவு என்பவற்றுக்கான இழப்பீடுகள் தொடர்பான விபரங்கள் கோரப்பட்டு, இழப்பீட்டு திணைக்களம் ஊடாக இழப்பீடுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில் வவுனியா மாவட்டத்தில் சொத்து மற்றும் உடமைகள் அழிவுக்காக ஆயிரத்து 32 பேரும், உயிரிழப்பு மற்றும் அபயங்களை இழந்தமை தொடர்பில் 119 பேரும், வழிபாட்டு தளங்களின் அழிவுக்கான இழப்பீடு கோரி 182 பேரும் என ஆயிரத்து 333 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இவர்களில் சொத்து மற்றும் உடமை அழிவு தொடர்பில் 137 பேருக்கும், உயிரிழப்பு மற்றும் அபயங்களை இழந்தமை தொடர்பில் 82 பேருக்கும், வழிபாட்டிடங்களின் அழிவுக்காக 83 பேருக்கும் என 302 பேருக்கு இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

வவுனியா விசேட நிருபர்

No comments:

Post a Comment

Post Bottom Ad