டொனால்ட் டிரம்பின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் கணக்குகள் காலவரையின்றி முடக்கப்பட்டது - News View

Breaking

Post Top Ad

Thursday, January 7, 2021

டொனால்ட் டிரம்பின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் கணக்குகள் காலவரையின்றி முடக்கப்பட்டது

வன்முறையை தூண்டும் வகையில் கருத்து பதிவிட்டதால், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் கணக்குகள் காலவரையின்றி முடக்கப்பட்டுள்ளது.

200 ஆண்டு வரலாற்றில் இல்லாத அளவில் அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் டொனால்ட் டிரம்ப் ஆதரவாளர்கள் நுழைந்து கலவரத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் நான்கு பேர் பலியாகினர்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வன்முறையை தூண்டும் வகையில் கருத்து பதிவிட்டதாக சமூக வலைத்தளங்களான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் அவரது கணக்கை தற்காலிகமாக முடக்கியது. 

தற்போது காலவரையின்றி முடக்கத்தை நீட்டியுள்ளது. சுமார் இரண்டு வாரத்திற்கு இந்த தடை நீடிக்கும் என பேஸ்புக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad