உள்ளுராட்சித் தேர்தல் முறைமையை மீள்பரிசீலனை செய்ய மூவர் அடங்கிய குழுவை நியமித்தார் அமைச்சர் ஜனக்க பண்டார - News View

About Us

About Us

Breaking

Monday, January 11, 2021

உள்ளுராட்சித் தேர்தல் முறைமையை மீள்பரிசீலனை செய்ய மூவர் அடங்கிய குழுவை நியமித்தார் அமைச்சர் ஜனக்க பண்டார

உள்ளுராட்சித் தேர்தல் முறைமையை மீள்பரிசீலனை செய்வதற்காக மூவர் அடங்கிய குழுவை அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் நியமித்துள்ளார்.

மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் முன்னாள் செயலாளரும் காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சின் செயலாளருமான ஆர்.ஏ.ஏ.கே ரணவக்கவின் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இந்த குழுவில், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சுதந்த லியனகே, காணி அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜயலத் ரவி திஸாநாயக்க ஆகியோர் அங்கத்தவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் கட்டளை சட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்ட விகிதாசார பிரதிநிதித்துவ கலப்பு முறையின் காரணமாக உள்ளுராட்சி நிறுவனங்களின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்பட்டதாக பல தரப்புக்களிடமிருந்து முறைபாடுகள் கிடைத்திருந்தன. அவற்றை ஆராய்ந்து, மூன்று மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு குழு பணிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. Enna kulu mudiwu sonnanlum thankal edupathe mudiwu so ethukku intha kala thamatham arase....

    ReplyDelete