விக்டோரியா நீர்த் தேக்க பகுதியில் சுண்ணக்கல் அகழத் தடை - அறிக்கை சமர்ப்பித்தது நியமிக்கப்பட்ட குழு - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 5, 2021

விக்டோரியா நீர்த் தேக்க பகுதியில் சுண்ணக்கல் அகழத் தடை - அறிக்கை சமர்ப்பித்தது நியமிக்கப்பட்ட குழு

(இராஜதுரை ஹஷான்)

விக்டோரியா நீர்த் தேக்க பகுதியிலிருந்து 100 மீற்றருக்குள் சுண்ணக்கல் அகழ்வை தடை செய்ய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சுற்றாடல் அமைச்சரின் ஆலோசனைக்கமைய, அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்கவால் நியமிக்கப்பட்ட குழு இந்த பரிந்துரையை முன்வைத்துள்ளது.

புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவரான பேராசிரியர் அநுரு வல்பொலவின் தலைமையின் கீழ் இந்த குழு ஆய்வுகளை முன்னெடுத்துள்ளன.

அண்மைக் காலமாக விக்டோரியா நீர்த் தேக்கத்தை அண்மித்த பகுதிகளில் ஏற்பட்ட சிறியளவு நில அதிர்வால், நீர்த் தேக்கத்தக்கு பாரிய பாதிப்பு இல்லை என்றும் அக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போது ஏற்படும் நில அதிர்வானது 2 ரிக்டருக்கும் குறைவானதாகவே பதிவாகுவதாகவும் நீர்த் தேக்கத்தில் நீர் நிரம்பும் போது ஏற்படும் அதிர்வுகள் இயற்கையான தன்மை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே நீர்த் தேகத்துக்கு அண்மித்த பகுதிகளில் சுண்ணக்கல் அகழ்வால் ஏற்படும் வெடிப்புகள் குறித்து அதிகம் கவனம் செலுத்தி 100 மீற்றருக்கு உட்பட்ட பகுதிகளில் சுண்ணக்கல் அகழ்வுக்கு தடை விதிக்குமாறும் இந்த குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

இதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்துக்கு பணித்துள்ளதாகவும் சுண்ணக்கல் அகழ்வின் போது ஏற்படும் வெடிப்புகள் அங்கிகரிக்கப்பட்ட அளவுகளில் மேற்கொள்ளப்படுகின்றனவா என்பது தொடர்பிலும் அவதானம் செலுத்துமாறு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

குறித்த நிபுணர் குழு நேற்று அமைச்சின் செயலாளருடன் சந்திப்பை மேற்கொண்டதுடன், 2 மணி நேரம் இந்த குழுவின் அறிக்கை குறித்து கலந்துரையாடியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment