நேற்று முதல் விடுவிக்கப்பட்ட மோதறை பொலிஸ் பிரிவில் அன்ட்ரூ வீதி பிரதேசம் முடக்கம் - News View

Breaking

Post Top Ad

Tuesday, January 5, 2021

நேற்று முதல் விடுவிக்கப்பட்ட மோதறை பொலிஸ் பிரிவில் அன்ட்ரூ வீதி பிரதேசம் முடக்கம்

மோதறை (முகத்துவாரம்) பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, புனித அன்ட்ரூ வீதி, புனித அன்ட்ரூ மேல் வீதி மற்றும் கீழ் வீதி பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டுத் மையம் இதனை தெரிவித்துள்ளது.

அதற்கமைய, இன்று (05) அதிகாலை 5.00 மணி முதல் குறித்த பகுதிகள் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்படுவதாக, குறித்த செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

கடந்த ஒக்டோபர் 22 முதல் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மோதறை பொலிஸ் பிரிவு, நேற்று (04) முதல் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment

Post Bottom Ad