பாடசாலை வளாகத்தில் நுளப்பு ஒழிப்பு வேலைத்திட்டம் - மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆகக்கூடிய டெங்கு நோயாளர்கள் - News View

About Us

About Us

Breaking

Saturday, January 9, 2021

பாடசாலை வளாகத்தில் நுளப்பு ஒழிப்பு வேலைத்திட்டம் - மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆகக்கூடிய டெங்கு நோயாளர்கள்

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களைத் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் நாளை பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா இதற்கமைவான கண்காணிப்பு நடவடிக்கைகள் இன்று நடைபெறுவதாக கூறினார்.

இதேவேளை இன்றையதினம் பாடசாலை வளாகத்தில் நுளப்பு ஒழிப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன் பணிப்பாளர் வைத்தியர் அருண ஜயசேகர கருத்து தெரிவிக்கையில் இந்த வருட கடந்த காலங்களில் 247 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதாகவும் கூறினார்.

ஆகக்கூடிய டெங்கு நோயாளர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்படுள்ளர். இவர்களின் எண்ணிக்கை 146 ஆகும்.

No comments:

Post a Comment