வட்ஸ்அப் சமூக வலைத்தளத்தின் புதிய நிபந்தனைகள் - டெலிகிராம், சிக்னல் செயலிகள் மீது மக்கள் ஆர்வம் - News View

About Us

About Us

Breaking

Saturday, January 9, 2021

வட்ஸ்அப் சமூக வலைத்தளத்தின் புதிய நிபந்தனைகள் - டெலிகிராம், சிக்னல் செயலிகள் மீது மக்கள் ஆர்வம்

வட்ஸ்அப் சமூக வலைத்தளத்தின் புதிய நிபந்தனைகளை தொடர்ந்து, டெலிகிராம், சிக்னல் ஆகிய மெஸேஜிங் செயலிகள் மீது மக்கள் கூடுதலாக ஆர்வம் காட்டிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

வட்ஸ்அப் சமூக வலைத்தளம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய விதிமுறைகளினால் பாவனையாளர்கள் பாரிய அளவிலான அதிர்ச்சிகளை எதிர்கொண்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாவனையாளர்களின் தகவல்கள், தொலைபேசி இலக்கம் அவர்கள் செல்லும் இடங்கள் என்பன பற்றிய தகவல்களை அவர்களின் அனுமதி இன்றி, பெற்றுக் கொள்ள வட்ஸ்அப் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான நிபந்தனைக் கோவை வட்ஸ்அப் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி பாவனையாளர்கள் முன் தோன்றிவரும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புகழ்பெற்ற மிகப் பெரிய கோடீஸ்வரரான எலன் மஸ்க் போன்றவர்கள் வட்ஸ்அப் சமூக வலைத்தளத்திற்கு பதிலாக சிக்னல், டெலிகிராம் ஆகிய சமூக வலைத்தளங்களை பரிந்துரை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாவனையாளர்களின் சகல தகவல்களையும் ஏனைய நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதற்கான வாய்ப்பு வட்ஸ்அப் நிறுவனத்திற்கு கிடைக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment