13.5 கோடி ரூபா பெறுமதியான உணர்வைத் தூண்டும் 18,000 மாத்திரைகள் பறிமுதல் - News View

About Us

About Us

Breaking

Thursday, January 7, 2021

13.5 கோடி ரூபா பெறுமதியான உணர்வைத் தூண்டும் 18,000 மாத்திரைகள் பறிமுதல்

ரூபா. 13½ கோடி பெறுமதியான உணர்வைத் தூண்டும் (Ecstacy) போதை மாத்திரைகள் 18,000 இனை சுங்கத் திணைக்களத்தினால் பறிமுதல் செய்யப்பட்ட்டுள்ளன.

பெல்ஜியத்திலிருந்து, கொழும்பு 05 பிரதேசத்திலுள்ள விலாசத்திற்கு வந்த குறித்த பொதிகளில் பூனைகளுக்கான உணவு எனும் பொதியினுள் இவ்வாறு சூட்சுமமாக இம்மாத்திரைகள் பொதி செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்கள பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்தார்.

இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட பொதி, கொழும்பு மத்திய அஞ்சல் பரிமாற்றகத்திற்கு விமான அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ள நிலையில், குறித்த பொதிகள் இன்று (07) ஊடகங்களுக்கு முன் திறக்கப்பட்டு காண்பிக்கப்பட்டது.

இம்மாத்திரைகளின் நிறை 9 கிலோ கிராம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உணர்வுகளைத் தூண்டும் போதை மாத்திரை வகையொன்று கைப்பற்றப்பட்ட சம்பவத்தின் அடிப்படையில், ஆசியாவின் மிகப்பெரும் போதைப் பொருள் சோதனை என்றும் இலங்கையில் நிறுவனமொன்று கைப்பற்றிய பாரிய போதைப் பொருள் தொகை இதுவென்றும், சுங்க திணைக்கள பேச்சாளர், மேலதிக பணிப்பாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்தார்.

இவ்வகையில் அனுப்பப்பட்ட மேலும் 08 பொதிகளில் 'காத்' எனும் புகையிலை வகையின் 16 கிலோ கிராம் கைப்பற்றப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். இது தொடர்பில் சுங்கத் திணைக்களம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

No comments:

Post a Comment