தற்போதைய சட்ட திட்டங்களை பொதுமக்கள் நட்புடையதாக எளிமையாக்க 18 பேர் கொண்ட ஆணைக்குழு ஜனாதிபதியால் நியமனம் - News View

About Us

About Us

Breaking

Thursday, January 7, 2021

தற்போதைய சட்ட திட்டங்களை பொதுமக்கள் நட்புடையதாக எளிமையாக்க 18 பேர் கொண்ட ஆணைக்குழு ஜனாதிபதியால் நியமனம்

பொதுமக்கள் நலனை நோக்கமாகக் கொண்டு, தற்போதுள்ள சட்டங்களையும் விதிகளையும் எளிமைப்படுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 18 பேர் கொண்ட ஆணைக்குழுவொன்றை நியமித்துள்ளார்.

இந்த ஆணைக்குழுவின் இணைத் தலைவர்களாக முன்னாள் ஜனாதிபதி செயலாளரும் ஜனாதிபதியின் தலைமை ஆலோசகருமான லலித் வீரதுங்க மற்றும் ஜோன் கீல்ஸ் குழுமத்தின் தலைவர் கிரிஷான் பாலேந்திரா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

ஆணைக்குழுவின் செயாலாளராக ஓய்வு பெற்ற அமைச்சு செயலாளர் திரு ஜி.எஸ் விதானகே நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக பின்வருவோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

1. காணி முகாமைத்துவம், அரச தொழில் முயற்சி காணிகள், சொத்துக்கள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் - எஸ்.டி.ஏ.பி. பொரலெஸ்ஸ

2. மின்சக்தி துறையில் ஓய்வு பெற்ற அமைச்சு செயலாளர் - எம்.எம்.சி. ஃபெர்டினாண்டோ

3. ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் சுரேஷ் டி மெல்

4. அரச நிதித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் - திருமதி. சி. வெலிகமகே

5. அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் நிறுவன பணிப்பாளர் நாயகம் – சந்தன குமாரசிங்க

6. கம்பனிச் சட்ட நிபுணர் – கலாநிதி ஹர்ஷ கப்ரால்

7. ஜனாதிபதி சட்டத்தரணி நிஹால் ஜயவர்தன

8. இலங்கை பட்டய கணக்காளர் திஷான் சுபசிங்க

9. சங்கன் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி - ரஞ்சித் குணதிலக

10. இலங்கை முதலீட்டு சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் - திருமதி ரேணுகா வீரகோன்

11. மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட் என்ட் பைனான்ஸ், பி.எல்.சி பணிப்பாளர் சபை உறுப்பினர் - ஜெரார்ட் ஒன்டாச்சி

12. நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கியின் பணிப்பாளர் (நிறைவேற்று தரமற்ற) - அர்ஜுன் பெர்னாண்டோ

13. சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நிர்மாணத் துறை – எஸ்.பி. லியனாரச்சி

14. மிலஸ்னா டீ, முகாமைத்துவ பணிப்பாளர் - என்சலம் பெரேரா

15. கைத்தொழில் சபை பொதுச்செயலாளர் / தலைமை நிறைவேற்று அதிகாரி - நிசங்க விஜேரத்ன

16. தீம் ரிசோர்ட்ஸ் & ஸ்பாஸ் தலைவர், பணிப்பாளர் நாயகம் - சந்திரா விக்ரமசிங்க

ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள பணிகள்
முதலீடுகள் மற்றும் நிர்மாணத்துறை உட்பட அனைத்து துறைகளுக்கும் தொடர்புடைய தற்போது வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை வழிகாட்டுதல்கள், அனுமதிப் பத்திரங்கள் மற்றும் உரிமம் வழங்கும் நடைமுறைகள் மற்றும் ஒப்புதல் நடைமுறைகள், அரச நிதி மற்றும் வரி வருவாய்கள் சம்பந்தப்பட்ட அனைத்து சட்டங்கள், ஒழுங்குமுறைகள் மற்றும் அவற்றை ஏற்படுத்துவதற்கு ஏதுவான விடயங்கள் குறித்து கவனம் செலுத்தி முழுமையாக மீளாய்வு செய்தல்.

அதிக எண்ணிக்கையிலான சுற்றறிக்கை வழிகாட்டுதல்களை வெளியிடுவதும், அவ்வப்போது பல்வேறு சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை அமுல்படுத்துவதும் காரணமாக அடிப்படை நோக்கத்திலிருந்து விலகல்களுக்கு வழிவகுத்துள்ளதா என்பதை ஆய்வு செய்தல்.

மிகவும் பயனுள்ள புதிய ஒழுங்குமுறை வழிமுறைகளை அடையாளம் காண்பதற்காக உலகளாவிய தரங்களுக்குள் மேற்கண்ட விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின் பொருந்தக்கூடிய தன்மையையும், இலங்கையில் அவற்றின் பொருத்தப்பாட்டினையும் மதிப்பீடு செய்தல்.

தற்போதுள்ள சிக்கலான மற்றும் ஒழுங்குமுறை சட்ட அமைப்புகளில் அவற்றைச் செயல்படுத்த அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் ஏற்படும் செலவை மதிப்பீடு செய்தல் மற்றும் மேற்கண்ட சட்ட விதிமுறைகளின் விளைவாக ஊழல் மற்றும் ஒழுங்கற்ற நடைமுறைகள் இடம்பெறுவதற்கான சாத்தியம் பற்றி மதிப்பீடு செய்தல்.

தற்போதுள்ள சுற்றறிக்கைகள், வழிகாட்டுதல்கள், சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை எளிமைப்படுத்தக்கூடிய துறைகளை அடையாளம் கண்டு, எளிமைப்படுத்தல் மற்றும் நவீனமயமாக்கலுக்கான ஆலோசனைகளை வழங்குதல்.

தேசிய அளவில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவன மட்டத்தில் பல்வேறு ஒப்புதல்கள், அனுமதிகள் மற்றும் உரிமம் வழங்கும் செயல்முறைகள் காரணமாக செயல்முறை இரட்டிப்பு நடந்திருக்கிறதா என்பதை ஆய்வு செய்து அத்தகைய செயல்முறைகளை பொருத்தமான முறையில் திருத்தம் செய்தல்.

இந்த செயல்பாடுகளைச் செய்ய ஆணைக் குழுவிற்கு 90 நாட்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆணைக்குழுவுக்கு அதன் செயல்பாடுகளைச் செய்வதற்கு தேவையான சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு பணிப்புரை வழங்க அதிகாரம் உள்ளது.

No comments:

Post a Comment