மட்டக்களப்பில் 100 பொலிஸாருக்கான ரபிட் அன்டிஜன் பரிசோதனையில் எவருக்கும் தொற்றில்லை - News View

Breaking

Post Top Ad

Thursday, January 7, 2021

மட்டக்களப்பில் 100 பொலிஸாருக்கான ரபிட் அன்டிஜன் பரிசோதனையில் எவருக்கும் தொற்றில்லை

மட்டக்களப்பில் இன்று (07) பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட ரபிட் அன்டிஜன் பரிசோதனையில் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என மட்டக்களப்பு பொது சுகாதார வைத்திய அதிகாரி, அலுவலக வைத்தியர் கிரிசுதன் தெரிவித்துள்ளார்.

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகம், மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் கடமையாற்றுகின்ற 100 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு ரபிட் அன்டிஜன் பரிசோதனைகள் இன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில், மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் பின் கிடைக்கப் பெற்ற அறிக்கையில் எந்தவொரு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என மட்டக்களப்பு பொது சுகாதார வைத்திய அதிகாரி கிரிசுதன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad