பைசர் கொரோனா தடுப்பூசியை 2ஆவது முறை போட்டுக் கொள்ள காலம் நிர்ணயம் - பரிந்துரைத்தது உலக சுகாதார அமைப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, January 7, 2021

பைசர் கொரோனா தடுப்பூசியை 2ஆவது முறை போட்டுக் கொள்ள காலம் நிர்ணயம் - பரிந்துரைத்தது உலக சுகாதார அமைப்பு

பைசர் நிறுவனத்தின் கொவிட்-19 தடுப்பூசியை முதல்முறை போட்டுக் கொண்ட பின், 21 முதல் 28 நாள் இடைவெளிக்குள் மறுபடி ஒருமுறை போட்டுக் கொள்ள வேண்டுமென உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ளது.

தற்போது உலக நாடுகள் சில பைசர் நிறுவனத்தின் கொவிட்-19 தடுப்பூசிகளை அதன் குடிமக்களுக்கு போட ஆரம்பித்துள்ளன.

இருப்பினும் சில நாடுகள் தடுப்பூசிகளின் கையிருப்பு குறையும்போது, இரண்டாவது முறை போடும் தடுப்பூசியை எப்போது போடுவது என்பதில் குழம்பியுள்ளன. தடுப்பூசித் தயாரிப்பு, விநியோகம், பராமரிப்பு போன்ற சிக்கல்களும் உள்ளன.

அதனால், இரண்டாவது முறை போடப்படும் தடுப்பூசியைச் சில நாடுகள் 6 வாரங்கள் வரை ஒத்தி வைக்கின்றன. சில நாடுகள் மாதக் கணக்கில் ஒத்தி வைக்கத் திட்டமிடுகின்றன. 

அப்படிச் செய்வதால் தடுப்பூசியின் செயல்திறன் குறையலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். அதனால், இரண்டாவது தடுப்பூசியை 4 வார கால இடைவெளிக்குள் போடுவது சிறந்தது என்று உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழு தெரிவித்துள்ளது.

தவிர்க்க முடியாத சூழலில் மட்டும், அந்த இடைவெளியை 6 வாரத்துக்கு அதிகரிக்கலாம் என்று அது குறிப்பிட்டது. அதன் மூலம், வைரஸ் தொற்றால் அதிக ஆபத்தை எதிர்நோக்குவோருக்கு முதல் தடுப்பூசி கிடைக்கும் வாய்ப்பு அதிகரிக்கும் என்பதைக் குழு சுட்டிக்காட்டியது.

தற்போது, புதுவகைக் கொரோனா வைரஸ் திரிபுகளும் அடையாளம் காணப்பட்டுள்ளதால் சுகாதாரப் பராமரிப்புத்துறை அதிக நெருக்கடிக்கு உள்ளாகி வருகிறது.

No comments:

Post a Comment