இஸ்ரேல் சர்ச்சைக்குரிய மேற்கு கரை பகுதியை பார்வையிட்டார் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் - News View

About Us

About Us

Breaking

Friday, November 20, 2020

இஸ்ரேல் சர்ச்சைக்குரிய மேற்கு கரை பகுதியை பார்வையிட்டார் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர்

சர்ச்சைக்குரிய இஸ்ரேலின் மேற்கு கரை மற்றும் கோலன் பகுதிகளை அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ நேற்று பார்வையிட்டார்.

அமெரிக்கா நீண்டகாலம் பேணி வந்த நிலைப்பாட்டை மாற்றி, யூதக் குடியேற்றங்கள் சர்வதேச சட்டங்களுடன் முரண்படவில்லை என்று பொம்பியோ குறிப்பிட்டு ஓர் ஆண்டுக்கு பின்னரே அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

இந்தப் பிரகடனம் பலஸ்தீனர்களின் கோபத்தை தூண்டியிருந்தது. இந்த யூதக் குடியேற்றங்கள் இருக்கும் பகுதிகள் தமது எதிர்கால சுதந்திர நாட்டைச் சேர்ந்தவை என்று பலஸ்தீனர்கள் வலியுறுத்தி வருகின்றனர். 

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. 1967 ஆம் ஆண்டு அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர் ஏற்பட்டது. இந்த போரில் இஸ்ரேல் வெற்றி பெற்றது. 

இந்த போரின்போது பாலஸ்தீன மக்கள் உரிமை கொண்டாடும் மேற்கு கரையின் பல்வேறு பகுதிகளையும், சிரியாவின் கோலன் பகுதிகளையும் இஸ்ரேல் கைப்பற்றியது.

மேலும், தான் கைப்பற்றிய பகுதிகளில் இஸ்ரேல் அரசு புதிய கட்டிடங்களை அமைத்து தங்கள் நாட்டு மக்களை குடியமர்த்தி வருகிறது. 

குறிப்பாக மேற்கு கரை பகுதியில் தொடர்ந்து புதிய கட்டுமானங்களை (செட்டில்மெண்ட்) இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது. இந்த செட்டில்மெண்ட்கள் கட்டிடங்கள் மேற்கு கரையில் இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் என உலக நாடுகள் அழைக்கின்றன. 

அதேபோல் கோலன் பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் கட்டுமான நடவடிக்கைகளையும் உலக நாடுகள் சட்டவிரோதமா ஆக்கிரமிப்புகள் என கூறுகிறது. 

ஆனால், இந்த அனெக்சேஷன் எனப்படும் நடவடிக்கையை நாட்டை விரிவுபடுத்துதல் என இஸ்ரேல் கூறி வருகிறது. சர்வதேச நாடுகளால் சட்டவிரோத ஆக்கிரமிப்பு என கூறப்பட்டு வரும் மேற்குக் கரையில் உள்ள இஸ்ரேல் செட்டில்மெண்ட்கள், மற்றும் சிரியாவிடம் இருந்து போரில் கைப்பற்றப்பட்ட கோலன் பகுதிகளை இஸ்ரேலின் ஒருங்கிணைந்த பகுதி என அமெரிக்கா சமீபத்தில் அங்கீகரித்தது.

1967 மத்திய கிழக்கு யுத்தத்தில் சிரியாவிடம் இருந்து இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டு 1981 இல் இஸ்ரேலின் ஆட்புலத்திற்குள் இணைக்கப்பட்ட கோலன் குன்றில் இஸ்ரேலின் இறைமையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த ஆண்டு உத்தியோகபூர்வமாக அங்கீகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ அரசுமுறை பயணமாக இஸ்ரேல் வந்துள்ளார். அவர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், மேற்கு கரையில் அமைந்துள்ள இஸ்ரேல் செட்டில்மெண்ட் பகுதிகளை மைக் பொம்பியோ  நேற்று பார்வையிட்டார். அதேபோல், சிரியாவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கோலன் பகுதிகளையும் பார்வையிட்டார்.

அமெரிக்க அரசின் முக்கிய பொறுப்பில் உள்ள மூத்த அதிகாரி ஒருவர் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு மேற்கு கரை மற்றும் கோலன் பகுதிகளுக்கு செல்வது இதுவே முதல்முறை. மைக் பொம்பியோவின் இந்த பயணத்தின் மூலம் மேற்கு கரை மற்றும் கோலன் பகுதியை இஸ்ரேலின் அங்கமாக அமெரிக்கா அங்கீகரித்துள்ளது.

மேற்கு கரை பகுதியில் பயணம் மேற்கொண்ட அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ இந்த பயணத்தின்போது பாலஸ்தீன அதிகாரிகள் யாரையும் சந்திக்கவில்லை. இதற்கிடையில், மைக் பொம்பியோ  பயணத்திற்கு சிரியா அரசு மற்றும் பாலஸ்தீன தலைவர் கண்டனம் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment